திருமுறை 4 · 4.007 · 10

திருஏகம்பம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
காந்தாரம்
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனைஅரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்திஇரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானைக்; கரவார் பால்விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;அரவு ஆடச், சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனைவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன், செழும் பவளம்தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;வான் நோக்கும் வளர் மதிசேர் சடையானை; வானோர்க்கும்ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனைஅப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கிஎப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
கைப்போது மலர் தூவிக், காதலித்து, வானோர்கள்,முப்போதும் முடி சாய்த்துத், தொழ நின்ற முதல்வனை;அப்போது மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி,எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப்பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்றஇண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
அண்டமாய், ஆதியாய், அருமறையோடு ஐம்பூதப்பிண்டமாய், உலகுக்கு ஓர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்;தொண்டர் தாம் மலர் தூவிச் சொல்மாலை புனைகின்றஇண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனைநீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவிஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானைப்,பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந்தூவிஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
தேசனைத்; தேசங்கள் தொழ நின்ற திருமாலால்பூசனைப்; பூசனைகள் உகப்பானைப்; பூவின் கண்வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசமாம்ஈசனை; எம்மானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம்வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனைச்,சொல்லானைச், சொல் ஆர்ந்த பொருளானைத், துகள் ஏதும்இல்லானை, எம்மானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்;புரித்தானைப், பதம் சந்திப் பொருள் உரு ஆம் புண்ணியனைத்;தரித்தானைக், கங்கை நீர், தாழ் சடைமேல்; மதில் மூன்றும்எரித்தானை; எம்மானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப்பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியைமாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சிஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
ஆகம்பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானைப்;பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசுபதியை;மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சிஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங்கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்புதொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.
சொற்பிரிப்பு
அடுத்து ஆனை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம்கொடுத்தானைக், குல வரையே சிலை ஆகக் கூர் அம்புதொடுத்தானைப், புரம் எரியச் சுனைமல்கு கயிலாயம்எடுத்தானைத் தடுத்தானை என் மனத்தே வைத்தேனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.