1
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாளாற்சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால்அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின் றாளாற்கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
சொற்பிரிப்பு
வன பவள வாய் திறந்து, வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்;சின பவளத் திண் தோள் மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;அனபவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.