1
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதேஉய்யலா மென்றெண்ணி உறிதூக்கி யுழிதந்தென் உள்ளம் விட்டுக்கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூ ரரைக்கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.
சொற்பிரிப்பு
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதேஉய்யலாம் என்று எண்ணி, உறி தூக்கிஉழி தந்து என் உள்ளம் விட்டுக்,கொய் உலா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்கையினால் தொழாது ஒழிந்து, கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.