1
பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
பாடு இளம் பூதத்தினானும், பவளச் செவ்வாய் வண்ணத்தானும்கூடு இள மென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.