திருமுறை 4 · 4.003 · 11

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
காந்தாரம்
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போதுகாதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்,போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்;கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடிவாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போதுகோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
போழ் இளங் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டமிட்டு ஆடா வருவேன்,ஆழி வலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்ற போது,கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடிமுரித்த இலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போதுவரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்ற போது,வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போதுசிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்
சொற்பிரிப்பு
பிறை இளங் கண்ணியினானைப் பெய் வளையாளொடும் பாடித்,துறை இளம் பல்மலர் தூவித், தோளைக் குளிரத் தொழுவேன்,அறை இளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்ற போது,சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக்காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போதுபேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
ஏடு மதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்,காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடாவருவேன்,ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது,பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-கண்டேன்,அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளொடும் பாடிஉண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போதுவண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
தண் மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது,வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடிவடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போதுஇடிகுர லன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
கடி மதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,இடிகுரல் அன்னது ஓர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போதுகருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்,பெரும்புலர் காலை எழுந்து, பெறுமலர் கொய்யா வருவேன்,அருங்கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது,கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போதுநற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடிப்,பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடாவருவேன்,அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்ற போது,நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடிஎங்கருள் நல்குங்கொ லெந்தை எனக்கினி யென்னா வருவேன்அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போதுபைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
சொற்பிரிப்பு
திங்கள் மதிக் கண்ணியானைத் தே(ன்) மொழியாளொடும் பாடி,எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போதுஇளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.கயிலாயக் காட்சி தரிசனத்திற்கு சுவாமி கட்டளையிட்டபோது ஓதியருளிய திருப்பதிகம்.
சொற்பிரிப்பு
வளர் மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடிக்,களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கணிக்கின்றேன்,அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.