திருமுறை 3 · 3.099 · 11

திருமுதுகுன்றம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய பரசமர் படையுடை யீரேபரசமர் படையுடை யீருமைப் பரவுவார் அரசர்கள் உலகில்ஆ வாரே.
சொற்பிரிப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய பரசு அமர் படை உடையீரே;பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய பையர வம்மசைத் தீரேபையர வம்மசைத் தீருமைப் பாடுவார் நைவிலர் நாடொறும் நலமே.
சொற்பிரிப்பு
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய பை அரவம் அசைத்தீரே;பை அரவம் அசைத்தீர்! உமைப் பாடுவார் நைவு இலர்; நாள்தொறும் நலமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய மழவிடை யதுவுடை யீரேமழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர் தாமே.
சொற்பிரிப்பு
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய மழ விடை அது உடையீரே;மழ விடை அது உடையீர்! உமை வாழ்த்துவார் பழியொடு பகை இலர்தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய உருவமர் சடைமுடி யீரேஉருவமர் சடைமுடி யீருமை யோதுவார் திருவொடு தேசினர் தாமே.
சொற்பிரிப்பு
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய உரு அமர் சடைமுடியீரே;உரு அமர் சடைமுடியீர்! உமை ஓதுவார் திருவொடு தேசினர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 5ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய பத்து முடியடர்த் தீரேபத்து முடியடர்த் தீருமைப் பாடுவார் சித்தநல் லவ்வடி யாரே.
சொற்பிரிப்பு
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய பத்து முடி அடர்த்தீரே;பத்து முடி அடர்த்தீர்! உமைப் பாடுவார் சித்தம் நல்ல(வ்) அடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன் றியன்றவ ரறிவரி யீரேஇயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார் பயன்றலை நிற்பவர் தாமே.
சொற்பிரிப்பு
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி, அன்று இயன்றவர் அறிவு அரியீரே;இயன்றவர் அறிவு அரியீர்! உமை ஏத்துவார் பயன் தலை நிற்பவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய கட்டமண் தேரைக்காய்ந் தீரேகட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார் சிட்டர்கள் சீர்பெறு வாரே.
சொற்பிரிப்பு
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய கட்டு அமண் தேரைக் காய்ந்தீரே;கட்டு அமண் தேரைக் காய்ந்தீர்! உமைக் கருதுவார் சிட்டர்கள் சீர் பெறுவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை நாடிய ஞானசம் பந்தன்நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ் பாடிய அவர்பழி யிலரே.
சொற்பிரிப்பு
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை நாடிய ஞானசம்பந்தன்நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் பாடிய அவர் பழி இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.