திருமுறை 3 · 3.100 · 11

திருத்தோணிபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
சீர்காழி - 05-தோணிபுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளிஅரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
சொற்பிரிப்பு
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருளஅரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்;பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர்சேர்ந்த இடம்சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்துசங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
சொற்பிரிப்பு
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க் கோமளமாது உமையாளபங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறுஅணிந்து,சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல் கொண்டார் தமது ஊர்துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்சித்தந் தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே.
சொற்பிரிப்பு
மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது உமை பேது உறலும்,சித்தம் தெளிய நின்று ஆடி, ஏறு ஊர் தீவண்ணர்,சில்பலிக்கு என்று,ஒத்தபடி வந்து, என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம்போலும்துத்தம் நல் இன் இசை வண்டு பாடும் தோணிபுரம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 4ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

5 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 5ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையெனஉள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரியமெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே.
சொற்பிரிப்பு
“வள்ளல் இருந்த மலை அதனை வலம் செய்தல் வாய்மை” எனஉள்ளம் கொள்ளாது, கொதித்து எழுந்து, அன்று, எடுத்தோன் உரம் நெரிய,மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும் இடம்போலும்துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே.
சொற்பிரிப்பு
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரை மலர் மேல் அயனும்,பல் பறவைப் படியாய் உயர்ந்தும், பன்றி அதாய்ப் பணிந்தும்,செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம்போலும்தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டிகை பீலிதட் டோ டுநின்று கோசரங் கொள்ளியரும்மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடியஇண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந்தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே.
சொற்பிரிப்பு
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்,மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய் மடிய,இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார்இடம் ஆம்தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையைமாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்னபாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே.
சொற்பிரிப்பு
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை,மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்— வாய்மையினால்நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்—சொன்னபா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.