திருமுறை 3 · 3.098 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடைஒண்மதி அணியுடை யீரேஒண்மதி அணியுடை யீருமை உணர்பவர்கண்மதி மிகுவது கடனே.
சொற்பிரிப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடைஒண்மதி அணி உடையீரே;ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்கண் மதி மிகுவது கடனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்சதிவழி வருவதொர் சதிரேசதிவழி வருவதொர் சதிருடை யீருமைஅதிகுணர் புகழ்வதும் அழகே.
சொற்பிரிப்பு
விதி வழி மறையவர் மிழலை உளீர், நடம்சதி வழி வருவது ஒர் சதிரே;சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர்! உமைஅதிகுணர் புகழ்வதும் அழகே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விரைமலி பொழிலணி மிழலையு ளீரொருவரைமிசை உறைவதும் வலதேவரைமிசை உறைவதொர் வலதுடை யீருமைஉரைசெயும் அவைமறை யொலியே.
சொற்பிரிப்பு
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், ஒருவரைமிசை உறைவதும் வலதே;வரைமிசை உறைவது ஒர் வலது உடையீர்! உமைஉரை செயுமவை மறை ஒலியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்இட்டெழில் பெறுகிற தெரியேஇட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்அட்டது வரைசிலை யாலே.
சொற்பிரிப்பு
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர், கையில்இட்டு எழில் பெறுகிறது எரியே;இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர்! புரம்அட்டது வரை சிலையாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வேனிகர் கண்ணியர் மிழலையு ளீர்நலபானிகர் உருவுடை யீரேபானிகர் உருவுடை யீரும துடனுமைதான்மிக உறைவது தவமே.
சொற்பிரிப்பு
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர், நலபால் நிகர் உரு உடையீரே;பால் நிகர் உரு உடையீர்! உமது உடன் உமைதான் மிக உறைவது தவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னிநிரையுற அணிவது நெறியேநிரையுற அணிவதோர் நெறியுடை யீருமதரையுற அணிவன அரவே.
சொற்பிரிப்பு
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், செனிநிரை உற அணிவது நெறியே;நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமதுஅரை உற அணிவன, அரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விசையுறு புனல்வயல் மிழலையு ளீர்அரவசைவுற அணிவுடை யீரேஅசைவுற அணிவுடை யீருமை அறிபவர்நசையுறு நாவினர் தாமே.
சொற்பிரிப்பு
விசை உறு புனல் வயல் மிழலை உளீர், அரவுஅசைவு உற அணிவு உடையீரே;அசைவு உற அணிவு உடையீர்! உமை அறிபவர்நசை உறும் நாவினர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்இலங்கைமன் இடர்கெடுத் தீரேஇலங்கைமன் இடர்கெடுத் தீருமை யேத்துவார்புலன்களை முனிவது பொருளே.
சொற்பிரிப்பு
விலங்கல் ஒண்மதில் அணி மிழலை உளீர், அன்றுஇலங்கை மன் இடர் கெடுத்தீரே;இலங்கை மன் இடர் கெடுத்தீர்! உமை ஏத்துவார்புலன்களை முனிவது பொருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமைஅற்புதன் அயனறி யானேஅற்புதன் அயனறி யாவகை நின்றவன்நற்பதம் அறிவது நயமே.
சொற்பிரிப்பு
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர், உமைஅற்புதன் அயன் அறியானே;அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்நல் பதம் அறிவது நயமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வித்தக மறையவர் மிழலையு ளீரன்றுபுத்தரொ டமணழித் தீரேபுத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்பத்திசெய் மனமுடை யவரே.
சொற்பிரிப்பு
வித்தக மறையவர் மிழலை உளீர், அன்றுபுத்தரொடு அமண் அழித்தீரே;புத்தரொடு அமண் அழித்தீர்! உமைப் போற்றுவார்பத்தி செய் மனம் உடையவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்சண்பையுள் ஞானசம் பந்தன்சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவைஒண்பொருள் உணர்வதும் உணர்வே.
சொற்பிரிப்பு
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,சண்பையுள் ஞானசம்பந்தன்சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,ஒண் பொருள் உணர்வதும் உணர்வே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.