திருமுறை 3 · 3.097 · 11

திருச்சிறுகுடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சிறுகுடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய படமலி அரவுடை யீரேபடமலி அரவுடை யீருமைப் பணிபவர் அடைவதும் அமருல கதுவே.
சொற்பிரிப்பு
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய படம் மலி அரவு உடையீரே;படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர் அடைவதும், அமருலகு அதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரேசுற்றிய சடைமுடி யீரும தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே.
சொற்பிரிப்பு
சிற்றிடை உடன் மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடியீரே;சுற்றிய சடைமுடியீர்! உம தொழு கழல் உற்றவர் உறு பிணி இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய துள்ளிய மானுடை யீரேதுள்ளிய மானுடை யீரும தொழுகழல் உள்ளுதல் செயநலம் உறுமே.
சொற்பிரிப்பு
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய துள்ளிய மான் உடையீரே;துள்ளிய மான் உடையீர்! உம தொழு கழல் உள்ளுதல் செய, நலம் உறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரமெரித் தீரேஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார் சொன்னலம் உடையவர் தொண்டே.
சொற்பிரிப்பு
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரம் எரித்தீரே;ஒன்னலர் புரம் எரித்தீர்! உமை உள்குவார் சொல்—நலம் உடையவர், தொண்டே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய பெற்றிகொள் பிறைமுடி யீரேபெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ் சற்றவர் அருவினை யிலரே.
சொற்பிரிப்பு
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய பெற்றி கொள் பிறை முடியீரே;பெற்றி கொள் பிறை முடியீர்! உமைப் பேணி நஞ்சு அற்றவர் அருவினை இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய மங்கையை இடமுடை யீரேமங்கையை இடமுடை யீருமை வாழ்த்துவார் சங்கைய திலர்நலர் தவமே.
சொற்பிரிப்பு
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய மங்கையை இடம் உடையீரே;மங்கையை இடம் உடையீர்! உமை வாழ்த்துவார் சங்கை அது இலர்; நலர், தவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறிகமழ் சடைமுடி யீரேவெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந் நெறியுணர் வோருயர்ந் தோரே.
சொற்பிரிப்பு
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறி கமழ் சடைமுடியீரே;வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்- நெறி உணர்வோர் உயர்ந்தோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய தசமுகன் உரநெரித் தீரேதசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர் வசையறும் அதுவழி பாடே.
சொற்பிரிப்பு
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய தசமுகன் உரம் நெரித்தீரே;தசமுகன் உரம் நெரித்தீர்! உமைச் சார்பவர் வசை அறுமது வழிபாடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செருவரை வயலமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவுசெய் தீரேஇருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார் அருவினை யொடுதுய ரிலரே.
சொற்பிரிப்பு
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவு செய்தீரே;இருவரை அசைவு செய்தீர்! உமை ஏத்துவார் அருவினையொடு துயர் இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய புத்தரொ டமண்புறத் தீரேபுத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல் பத்தர்கள் தம்முடைப் பரிசே.
சொற்பிரிப்பு
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய புத்தரொடு அமண் புறத்தீரே;புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல் பத்தர்கள் தம் உடைப் பரிசே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய மானமர் கரமுடை யீரேமானமர் கரமுடை யீருமை வாழ்த்திய ஞானசம் பந்தன தமிழே.
சொற்பிரிப்பு
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய மான் அமர் கரம் உடையீரே;மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய ஞானசம்பந்தன தமிழே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.