திருமுறை 3 · 3.096 · 11

திருநெல்வெண்ணெய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
நெல்வெண்ணெய்
நாடு
நடுநாடு

1

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும் நெல்வெணெய் மேவிய நீரேநெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும் சொல்வணம் இடுவது சொல்லே.
சொற்பிரிப்பு
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும், நெல்வெணெய் மேவிய நீரே;நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும் சொல் வணம் இடுவது சொல்லே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க் கச்சிள அரவசைத் தீரேகச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர் அச்சமொ டருவினை யிலரே.
சொற்பிரிப்பு
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க் கச்சு இள அரவு அசைத்தீரே;கச்சு இள அரவு அசைத்தீர்! உமைக் காண்பவர் அச்சமொடு அருவினை இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரைவிரி கோவணத் தீரேஅரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு உரைவிரிப் போருயர்ந் தோரே.
சொற்பிரிப்பு
நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரை விரி கோவணத்தீரே;அரை விரி கோவணத்தீர்! உமை அலர்கொடு உரை விரிப்போர் உயர்ந்தோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய ஊர்மல்கி உறையவல் லீரேஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல் பார்மல்கு புகழவர் பண்பே.
சொற்பிரிப்பு
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய ஊர் மல்கி உறைய வல்லீரே;ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல் பார் மல்கு புகழவர் பண்பே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய ஆடிளம் பாப்பசைத் தீரேஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு பாடுளம் உடையவர் பண்பே.
சொற்பிரிப்பு
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய ஆடு இளம் பாப்பு அசைத்தீரே!ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு பாடு உளம் உடையவர் பண்பே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நெற்றியொர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய பெற்றிகொள் பிறைநுத லீரேபெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல் கற்றறி வோர்கள்தங் கடனே.
சொற்பிரிப்பு
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய பெற்றி கொள் பிறை நுதலீரே;பெற்றி கொள் பிறைநுதலீர்! உமைப் பேணுதல் கற்று அறிவோர்கள் தம் கடனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய கறையணி மிடறுடை யீரேகறையணி மிடறுடை யீருமைக் காண்பவர் உறைவதும் உம்மடிக் கீழே.
சொற்பிரிப்பு
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய கறை அணி மிடறு உடையீரே;கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர் உறைவதும் உம் அடிக்கீழே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன் றரக்கனை அசைவுசெய் தீரேஅரக்கனை யசைவுசெய் தீருமை அன்புசெய் திருக்கவல் லாரிட ரிலரே.
சொற்பிரிப்பு
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று அரக்கனை அசைவு செய்தீரே;அரக்கனை அசைவு செய்தீர்! உமை அன்பு செய்து இருக்க வல்லார் இடர் இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன் றிருவரை யிடர்கள்செய் தீரேஇருவரை யிடர்கள்செய் தீருமை யிசைவொடு பரவவல் லார்பழி யிலரே.
சொற்பிரிப்பு
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று இருவரை இடர்கள் செய்தீரே;இருவரை இடர்கள் செய்தீர்! உமை இசைவொடு பரவ வல்லார் பழி இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண்கெடுத் தீரேசாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே.
சொற்பிரிப்பு
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண் கெடுத்தீரே;சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் யீசனை நலமல்கு ஞானசம் பந்தன்நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ் சொலமல்கு வார்துய ரிலரே.
சொற்பிரிப்பு
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை, நலம் மல்கு ஞானசம்பந்தன்நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் துயர் இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.