திருமுறை 3 · 3.095 · 11

திருஇன்னம்பர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
இன்னம்பர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய வண்டிசைக் குஞ்சடை யீரேவண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார் தொண்டிசைக் குந்தொழி லோரே.
சொற்பிரிப்பு
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய வண்டு இசைக்கும் சடையீரே;வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார் தொண்டு இசைக்கும் தொழிலாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய தாழ்தரு சடைமுடி யீரேதாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர் ஆழ்துயர் அருவினை யிலரே.
சொற்பிரிப்பு
யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய தாழ்தரு சடைமுடியீரே;தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர் ஆழ்துயர் அருவினை இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய வளமதி வளர்சடை யீரேவளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார் உளமதி மிகவுடை யோரே.
சொற்பிரிப்பு
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய வள மதி வளர் சடையீரே;வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார் உளம் மதி மிக உடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய கடிகமழ் சடைமுடி யீரேகடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும் அடியவர் அருவினை யிலரே.
சொற்பிரிப்பு
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய கடி கமழ் சடைமுடியீரே;கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும் அடியவர் அருவினை இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய உமையொரு கூறுடை யீரேஉமையொரு கூறுடை யீருமை உள்குவார் அமைகில ராகிலர் அன்பே.
சொற்பிரிப்பு
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய உமை ஒரு கூறு உடையீரே;உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார் அமைகிலர் ஆகிலர், அன்பே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய தண்ணருஞ் சடைமுடி யீரேதண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர் விண்ணவர் அடைவுடை யோரே.
சொற்பிரிப்பு
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய தண் அருஞ் சடைமுடியீரே;தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர் விண்ணவர் அடைவு உடையோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய நிழல்திகழ் மேனியி னீரேநிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர் குழறிய கொடுவினை யிலரே.
சொற்பிரிப்பு
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய நிழல் திகழ் மேனியினீரே;நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர் குழறிய கொடுவினை இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய தூர்த்தனைத் தொலைவுசெய் தீரேதூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர் கூர்த்தநற் குணமுடை யோரே.
சொற்பிரிப்பு
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர் கூர்த்த நல் குணம் உடையோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய அயனுமால் அறிவரி யீரேஅயனுமால் அறிவரி யீரும தடிதொழும் இயலுளார் மறுபிறப் பிலரே.
சொற்பிரிப்பு
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய அயனும் மால் அறிவு அரியீரே;அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும் இயல் உளார் மறுபிறப்பு இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய தேரமண் சிதைவுசெய் தீரேதேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ ரார்துயர் அருவினை யிலரே.
சொற்பிரிப்பு
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய தேர் அமண் சிதைவு செய்தீரே;தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர் ஆர் துயர், அருவினை, இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை நாடமர் ஞானசம் பந்தன்நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ் பாடவல் லார்பழி யிலரே.
சொற்பிரிப்பு
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை, நாடு அமர் ஞானசம்பந்தன்நாடு அமர் ஞானசம்பந்தன நல்—தமிழ், பாட வல்லார் பழி இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.