1
விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவெண் பொடியணி வீரேசுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல் எண்ணவல் லாரிட ரிலரே.
சொற்பிரிப்பு
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய சுண்ண வெண்பொடி அணிவீரே;சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல் எண்ண வல்லார் இடர் இலரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.