1
படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
படியுள் ஆர் விடையினர், பாய் புலித் தோலினர், பாவநாசர்பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை மங்கையோடும்அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.