திருமுறை 3 · 3.092 · 11

திருநெல்வேலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
நெல்வேலி
நாடு
பாண்டியநாடு

1

மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமேபொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
மருந்து அவை; மந்திரம், மறுமை நன் நெறி அவை; மற்றும் எல்லாம்;அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன்நெஞ்சமே!பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவேதுன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்துதென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
“என்றும் ஓர் இயல்பினர்” என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச்சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்பு அதுவேதுன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்துதென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ்செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
பொறி கிளர் அரவமும், போழ் இள மதியமும், கங்கைஎன்னும்நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி,கிறிபட நடந்து, நல் கிளி மொழி யவர் மனம் கவர்வர் போலும்செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணிஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும்,பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணிஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம்தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
ஏன வெண் கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள அரவும்,கூனல் வெண் பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல் உடையார்ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள்தேனில் வண்டு அமர் பொழில்—திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர்வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
வெடி தரு தலையினர்; வேனல் வெள் ஏற்றினர்; விரிசடையர்பொடி அணி மார்பினர்; புலி அதள் ஆடையர்; பொங்கு அரவர்;வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல் செய்வார்செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்றுதக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மைபுக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்; அடிகள்; அன்று,தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள்செம்மைபுக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவேஉந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலைசிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவேஉந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலைசிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணாஅங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது“அங்கணா! அருள்!” என அவர் அவர் முறைமுறைஇறைஞ்ச நின்றார்சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங்கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
சொற்பிரிப்பு
துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர், என்னும்அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல,திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்னஅருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே.
சொற்பிரிப்பு
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித்திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர்தம்மை,பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்னஅருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.