திருமுறை 3 · 3.091 · 11

திருவடகுரங்காடுதுறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
வடகுரங்காடுதுறை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லைவேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைவீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.
சொற்பிரிப்பு
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்லசந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதிஉந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைஎந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே.
சொற்பிரிப்பு
மந்தம் ஆய் இழி மதக்களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்லசந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி,உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்திஎத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைமத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.
சொற்பிரிப்பு
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி,எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல்சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்திஎறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைமறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே.
சொற்பிரிப்பு
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி,எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,மறி உலாம் கையினர் மலர் அடி தொழுது எழ மருவும் உள்ளக்குறியினார் அவர் மிகக் கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்திஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைபீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே.
சொற்பிரிப்பு
கோடுஇடைச்சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்டமுன்நீர்காடு உடைப் பீலியும் கடறு உடைப் பண்டமும் கலந்துநுந்தி,ஓடு உடைக் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,பீடு உடைச் சடைமுடி அடிகளார் இடம் எனப் பேணினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றிவாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்திஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைநீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.
சொற்பிரிப்பு
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றிவாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள்உந்திஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைநீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்கவாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்திஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.
சொற்பிரிப்பு
நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்கவாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி,ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்பெருந்திறத் தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைஅருந்திறத் திருவரை யல்லல்கண் டோ ங்கிய அடிகளாரே.
சொற்பிரிப்பு
பொரும் திறல் பெருங்கைமா உரித்து, உமை அஞ்சவே, ஒருங்கி நோக்கி,பெருந் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்வருந் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,அருந்திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கியஅடிகளாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்திஎட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.
சொற்பிரிப்பு
கட்டு அமண் தேரரும், கடுக்கள் தின் கழுக்களும், கசிவு ஒன்று இல்லாப்பிட்டர் தம் அற உரை கொள்ளலும்! பெரு வரைப் பண்டம் உந்திஎட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்சிட்டனார் அடி தொழ, சிவகதி பெறுவது திண்ணம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைப்போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.
சொற்பிரிப்பு
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை,காழியான்—அருமறை ஞானசம் பந்தன கருது பாடல்கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.