1
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற்தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.