திருமுறை 3 · 3.089 · 11

திருக்கொச்சைவயம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சீர்காழி - 11-கொச்சைவயம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டுநிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
சொற்பிரிப்பு
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம்உந்தி,குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,நிரந்து மா வயல் புகு நீடு கோட் டாறுசூழ் கொச்சை மேவிப்பொருந்தினார் திருந்துஅடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல்அதுஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும்நுந்திக்கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டாறாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே.
சொற்பிரிப்பு
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி,கோல மா மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டு கோட்டாறுஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்கன்னிமார் முலைநலம் கவரவந் தேறுகோட் டாறுசூழமன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவின்நாளும்முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே.
சொற்பிரிப்பு
பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி,கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழமன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும்முன்னைநோய்தொடரும்ஆறுஇல்லை காண்நெஞ்சமேஅஞ்சல்நீயே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடேவந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேயஎந்தையார் அடிநினைந் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே.
சொற்பிரிப்பு
கந்தம் ஆர் கேதகைச் சந்தனக் காடு சூழ் கதலி மாடேவந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட,கொந்து வார் குழலினார் குதி கொள் கோட் டாறு சூழ் கொச்சை மேயஎந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மறைகொளுந் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்சிறைகொளும் புனலணி செழும்பதி திகழ்மதிற் கொச்சைதன்பால்உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்தஇறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
சொற்பிரிப்பு
மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டிசிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில்கொச்சை தன்பால்,உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த,இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சுற்றமும் மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றேஉற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா உள்கினானோர்குற்றமில் லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவிநற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே.
சொற்பிரிப்பு
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே,உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர்குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவிநல்—தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்திகண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சைஅண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே.
சொற்பிரிப்பு
கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில் கூடி, மந்திகண்ட வார்கழை பிடித்து ஏறி, மா முகில்தனைக் கதுவுகொச்சை,அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய, ஆலம்உண்ட மா கண்டனார் தம்மையே உள்கு, நீ! அஞ்சல்,நெஞ்சே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளிமடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடேபெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.
சொற்பிரிப்பு
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மா மலை எடுத்து,ஆர்த்த வாய்கள்உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ளிமடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னைமாடே,பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்துகுரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்தகரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.
சொற்பிரிப்பு
அரவினில்—துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்துகுரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்குசெம்பொன்விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்தகரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,நெஞ்சே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
சொற்பிரிப்பு
கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும்,இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர்நடு உறை நம்பனை; நால்மறை யவர் பணிந்து ஏத்த, ஞாலம்உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சைஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தேஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்னவாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லர்வா னுலகின்மேலே.
சொற்பிரிப்பு
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள் கொச்சைஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தேஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்னவாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின் மேலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.