திருமுறை 3 · 3.088 · 11

திருவிளமர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
விளமர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
சொற்பிரிப்பு
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம்ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளாஅத் தகவு அடி தொழ, அருள் பெறு கண்னொடும் உமையவள்வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலிஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.
சொற்பிரிப்பு
பட்டு இலகிய முலை அரிவையர்உலகினில் இடு பலிஒட்டு இலகு இணை மர வடியினர், உமை உறு வடிவினர்,சிட்டு இலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வது ஒர்விட்டு இலகு அழகு ஒளி பெயரவர், உறைவது விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதொர் அரவொடுசெங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி மார்பினர்சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.
சொற்பிரிப்பு
அம் கதிர் ஒளியினர்; அரை இடை மிளிர்வது ஒர் அரவொடுசெங்கதிர் அன நிறம், அனையது ஒர் செழு மணி மார்பினர்;சங்கு, அதிர் பறை, குழல், முழவினொடு, இசை தரு சரிதையர்வெங்கதிர் உறும் மழு உடையவர்; இடம் எனில் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.
சொற்பிரிப்பு
மாடம் அது என வளர் மதில் அவை எரி செய்வர், விரவு சீர்ப்பீடு என அருமறை உரை செய்வர், பெரிய பல் சரிதைகள்பாடலர், ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்வேடம் அது உடையவர், வியல் நகர் அது சொலில் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.
சொற்பிரிப்பு
பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக்கொண்டு, அலை குரை கழல் அடி தொழு மவர் வினை குறுகிலர்விண்தலை அமரர்கள் துதி செய அருள்புரி விறலினர்வெண்தலை பலி கொளும் விமலர் தம் வள நகர் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மனைகள்தொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்முனைகெட வருமதிள் எரிசெய்த அவர்கழல் பரவுவார்வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.
சொற்பிரிப்பு
மனைகள் தொறு இடு பலி அது கொள்வர், மதி பொதி சடையினர்கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர்,முனை கெட வரு மதில் எரி செய்த அவர், கழல் பரவுவார்வினை கெட அருள் புரி தொழிலினர், செழு நகர் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசைவெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.
சொற்பிரிப்பு
நெறி கமழ் தரும் உரை உணர்வினர், புணர்வு உறு மடவரல்செறி கமழ் தரு உரு உடையவர், படை பல பயில்பவர்,பொறி கமழ் தரு பட அரவினர், விரவிய சடை மிசைவெறி கமழ் தரு மலர் அடைபவர், இடம் எனில் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.
சொற்பிரிப்பு
தெண்கடல் புடை அணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்பண் பட வரைதனில் அடர் செய்த பைங்கழல் வடிவினர்,திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார்விண் கடல் விடம் மலி அடிகள் தம் வள நகர் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுறஅண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
சொற்பிரிப்பு
தொண்டு அசைவு உற வரு துயர் உறு காலனை மாள்வு உறஅண்டல் செய்து, இருவரை வெரு உற ஆர் அழல் ஆயினார்கொண்டல் செய்தரு திருமிடறினர்; இடம் எனில் அளி இனம்விண்டு இசை உறு மலர் நறு மது விரி பொழில் விளமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபலகொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார்பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.
சொற்பிரிப்பு
ஒள்ளியர் தொழுது எழ, உலகினில் உரை செயும் மொழிபல;கொள்ளிய களவினர் குண்டிகை யவர் தவம் அறிகிலார்பள்ளியை மெய் எனக் கருதன்மின்! பரிவொடு பேணுவீர்வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவியஅந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.
சொற்பிரிப்பு
வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை,சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவியஅந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்-பந்தன மொழி இவை உரை செயு மவர் வினை பறையுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.