1
தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமேமிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.