திருமுறை 3 · 3.085 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசைவிட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.
சொற்பிரிப்பு
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசைவிட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலைப்பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.
சொற்பிரிப்பு
எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமாவைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.
சொற்பிரிப்பு
மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமாவைத்தவர், மதகரி உரிவை செய் தவர், தமை மருவினார்தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதருகவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலாமுவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதிள்வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.
சொற்பிரிப்பு
செவ் அழல் என நனி பெருகிய உருவினர், செறிதருகவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலாமுவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில்வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர் பலியெனாஎங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமாவெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.
சொற்பிரிப்பு
பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனாஎங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமாவெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்மின்னென மிளிர்வதொர் அரவினர் பதிவிழி மிழலையே.
சொற்பிரிப்பு
பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி வடிவினர்உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதொ ராமைபூண்டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதொர் சரிதையர்மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
சொற்பிரிப்பு
அக்கினொடு, அரவு, அரை அணி திகழ் ஒளியதுஒர் ஆமை, பூண்டுஇக்கு உக, மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்;கொக்கரை, குழல், முழ, விழவொடும் இசைவது ஒர் சரிதையர்மிக்கவர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்பூதமொ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்வேதமொ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.
சொற்பிரிப்பு
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடிஓருணர் வினர்செல லுறலரு முருவினொ டொளிதிகழ்வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.
சொற்பிரிப்பு
நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடிஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளிதிகழ்வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
சொற்பிரிப்பு
இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது ஒர்பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையைமன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே.
சொற்பிரிப்பு
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்தமிழ்சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.