1
பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதிபுண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி புறவமே.
சொற்பிரிப்பு
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்நண்ணிய பிணி கெட அருள் புரிபவர், நணுகு உயர் பதிபுண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.