திருமுறை 3 · 3.082 · 11

திருஅவளிவணல்லூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
அவளிவணல்லூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாகஅம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரி நூலொடு குலாவி,தம் பரிசினோடு சுடுநீறு தட வந்து, இடபம் ஏறி,கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசைஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்கஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
ஓமையன, கள்ளியன, வாகையன, கூகை முரல் ஓசை,ஈமம் எரி, சூழ் சுடலை வாசம்; முது காடு நடம் ஆடி;தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி, மிக்கு ஒளி துளங்க,ஆமையொடு பூணும் அடிகள்(ள்); உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீறுடைய மார்பில்இம வான்மகளொர் பாகம்நிலை செய்துகூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும்ஆறுடைய வார்சடையி னான்உறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர் பாகம் நிலைசெய்துகூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆ யது ஒரு கோலம்ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்பணியும்அடி யார்களன பாவம்அற இன்னருள் பயந்துதுணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடல் தொங்கஅணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
“பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர்” என்று உலகு பேணிப்பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல் தொங்கஅணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டுகழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமில ராவர்அழலுமழு ஏந்துகையி னானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு“கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள்” என்று அமரர் கூடித்தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தஅருள் செய்துநஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி தாகியொரு நம்பன்மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக லத்தொடு வளாவிஅஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்துநஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்;மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி,அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடிஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவி னோடும் இசை செய்ய,பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம் ஆடி,ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஒருவரையும் மேல்வலிகொ டேனென எழுந்தவிற லோன்இப்பெருவரையின் மேலொர்பெரு மானுமுள னோவென வெகுண்டகருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனைஅருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
“ஒருவரையும் மேல் வலி கொடேன்” என எழுந்த விறலோன், ”இப்பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உள னோ?” என வெகுண்டகருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனுஞ்செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்றுசிறி தேயும்அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அ ணைந்த புகழோனும்,வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும்,செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்வழியருகு சாரவெயில் நின்றடிசி லுள்கிவரு வாரும்பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
சொற்பிரிப்பு
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்போனமொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர வூரன்ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள் தீயதிலர் தாமே.
சொற்பிரிப்பு
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.