திருமுறை 3 · 3.081 · 11

திருத்தோணிபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சீர்காழி - 05-தோணிபுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பிஅங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்துங்கமணி இப்பிகள்க ரைக்குவரு தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒரு பால் உடன் விரும்பி,அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்எங்கள் பெருமான் இடம் எனத் தகும் மு னைக் கடலின் முத்தம்,துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்துஅல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது,இயம்ப,கல் அரிய மாமலையர் பாவை ஒரு பாகம் நிலைசெய்து,அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம்என்பர்சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம்ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்கண்டரவ வொண்கடலில் நஞ்சம்அமு துண்டகட வுள்ளூர்தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்துபண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பர மேட்டி; பழி தீரக்கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்;ஊர்தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலைஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்தவில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலைஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்தவில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய் தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தேயுமதி யஞ்சடையி லங்கிடவி லங்கன்மலி கானிற்காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வுதூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
தேயும் மதியம் சடை இலங்கிட, வி லங்கல் மலி கானில்காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்; நினைப்பார்தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வுதூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பற்றலர்தம் முப்புரம்எ ரித்தடிப ணிந்தவர்கள் மேலைக்குற்றமதொ ழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்பற்றவன்இ சைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்துற்றசடை யத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி ப ணிந்தவர்கள் மேலைக்குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில்பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பண்ணமரு நான்மறையர் நூன்முறைப யின்றதிரு மார்பிற்பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்துண்ணெனவி ரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
பண் அமரும் நால்மறையர், நூல் முறை ப யின்ற திருமார்பில்பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான்,ஊர்துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தென்றிசையி லங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்துவென்றிசைபு யங்களைய டர்த்தருளும் வித்தகனி டஞ்சீர்ஒன்றிசையி யற்கிளவி பாடமயி லாடவளர் சோலைதுன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்துவென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலைதுன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடிஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகிஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்தோற்றமிகு நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடிஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ டுத்தடை வினானக்காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதில்தோடுகுழை பெய்தவர்த மக்குறைவு தோணிபுர மாமே.
சொற்பிரிப்பு
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெ டுத்து, அடைவினான், அக்காடு பதி ஆக நடம் ஆடி, மட மாதொடு இரு காதில்-தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேயமஞ்சனைவ ணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலைதஞ்சமென நின்றிசைமொ ழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே.
சொற்பிரிப்பு
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேயமஞ்சனை வணங்கு திரு ஞானசம் பந்தன சொல்மாலை,தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடி யார்கள், தடுமாற்றம்வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.