திருமுறை 3 · 3.080 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத்தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகேகார்மருவு வெண்கனக1 மாளிகை கவின்பெருகு வீழிநகரே.பாடம் : 1வெண்களப.
சொற்பிரிப்பு
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள்பணிய,தார் மருவு கொன்றை அணி தாழ்சடையி னான் அமர் சயம் கொள் பதிதான்-பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகேகார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற்சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர்மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.
சொற்பிரிப்பு
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி நல்சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள் மேனியவன் ஊர்மட்டுஉலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு பொழில்வாய்விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள்வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம்பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார்விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவு வீழிநகரே.
சொற்பிரிப்பு
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன் உயிர்களுக்குஎண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்பண் இழிவு இலாத வகை பாட, மட மஞ்ஞை நடம் ஆட, அழகு ஆர்விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நன்கலை தெரிந்தவவரோடந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅரனூர்கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெருகவேவெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே.
சொற்பிரிப்பு
செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த அவரோடுஅந்தம்இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்— தண்புனல் வளம் பெருகவே,வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பூதபதி யாகிய புராணமுனி புண்ணியநன் மாதைமருவிப்பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்மாதவர்கள் அன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்ஏதமதி லாதவகை இன்பம்அமர் கின்றஎழில் வீழிநகரே.
சொற்பிரிப்பு
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,ஏதம் அது இலாத வகை இன்பம் அமர் கின்ற எழில் வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும் மாதவமும் மற்றுமுலகத்தெண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை யோர்கள்பெரு மானதிடமாம்நண்ணிவரு நாவலர்கள் நாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.
சொற்பிரிப்பு
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்துஎண்இல்பொருள் ஆயவை படைத்தஇமை யோர்கள்பெருமானதுஇடம்ஆம்நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்றபுகழ் சேர்விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசைவீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய்மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.
சொற்பிரிப்பு
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை போய்,அந்தர—விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி இருள்வாய்,மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிளோடானதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே.
சொற்பிரிப்பு
ஆன வலியின் தசமுகன் தலை அ ரங்க, அணி ஆழிவிரலால்,ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த மதிலோடுஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏனவுரு வாகிமண் இடந்தஇமை யோனும்எழி லன்னவுருவம்ஆனவனும் ஆதியினொ டந்தமறி யாதஅழல் மேனியவனூர்வானண வுமாமதிள்ம ருங்கலர் நெருங்கிய வளங்கொள் பொழில்வாய்வேனலமர்2 வெய்திடவிளங் கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.பாடம் : 2வேனமலர்.
சொற்பிரிப்பு
ஏன உரு ஆகி மண் இடந்த இமை யோனும், எழில் அன்ன உருவம்ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறி யாத அழல்மேனியவன் ஊர்வான்அணவும் மாமதில் மருங்குஅலர் நெருங்கிய வளம்கொள்பொழில்வாய்வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்தெண்திசையு மில்லதொரு தெய்வமுள தென்பரதுவென்ன பொருளாம்பண்டையய னன்னவர்கள் பாவனைவி ரும்புபரன் மேவுபதிசீர்வெண்தரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.
சொற்பிரிப்பு
குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்துஎண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அதுஎன்ன பொருள் ஆம்?பண்டை அயன் அன்னவர்கள் பாவனைவி ரும்பு பரன் மேவு பதி சீாவெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்சித்திரவி மானம்அமர் செல்வமலிகின்ற சிவ லோகமருவிஅத்தகுகு ணத்தவர்க ளாகியனுபோக மொடியோ கம்மவரதே3.பாடம் : யோகரவரே.
சொற்பிரிப்பு
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோக மொடு யோகு அவரதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.