திருமுறை 3 · 3.079 · 11

திருக்கோகரணம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
கோகரணம்
நாடு
துளுவ நாடு

1

என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியெனதுள்நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவுள் நண்ணுமிடமாம்ஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார்குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.
சொற்பிரிப்பு
என்றும் அரியான், அயலவர்க்கு;இயல்இ சைப்பொருள்கள் ஆகி எனது உள்நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் மு டிக் கடவுள்; நண்ணும் இடம் ஆம்ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமை யோர் பரவும் நீடு அரவம் ஆர்குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மாமலர்கள்தூய்க்கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே.
சொற்பிரிப்பு
பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி, அமரர்வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இ றைஞ்சி, நிறை மாமலர்கள் தூய்,கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல் கின்ற வளர்கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முறைத்திறம் உறப்பொருள் தெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய்மறைத்திறம றத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடந்துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக்குறைத்தறையி டக்கரி புரிந்திடறு சாரல்மலி கோகரணமே.
சொற்பிரிப்பு
முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனி வர்க்கு அருளி, ஆல நிழல்வாய்,மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சம யங்களை வகுத்தவன் இடம்துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி, மதகைக்குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கஎரி வீசிமுடிமேல்அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தஅழ கன்றனிடமாம்மலைத்தலை வகுத்தமுழை தோறும்உழை வாளரிகள் கேழல்களிறுகொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே.
சொற்பிரிப்பு
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல்அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன்தன் இடம் ஆம்மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை,வாள் அரிகள்,கேழல், களிறு,கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ் கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய எருக்கலரி வன்னிமுடியின்சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எமாதிபயில் கின்றபதியாம்படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.
சொற்பிரிப்பு
தொடைத்தலை மலைத்து, இதழி, துன்னிய எருக்கு, அலரி, வன்னி, முடியின்சடைத்தலை மிலைச்சிய தபோதனன்; எம் ஆதி; பயில்கின்றபதி ஆம்படைத் தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி,குடைத்து அலை நதிப் படிய நின்று, பழி தீர நல்கு கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல்சி லம்பொலிசெயஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரும் ஈசனிடமாம்ஆறுசம யங்களும் விரும்பியடி பேணியரன் ஆகமமிகக்கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.
சொற்பிரிப்பு
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்புஒலிசெய,ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம்ஆம்ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு,கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசைபல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலேநல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக்கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே.
சொற்பிரிப்பு
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்; அக்கு அரைமிசைபல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர்அயலேநல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக,கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொ டுத்து அருளு கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வரைத்தலம் நெருக்கிய முருட்டிருள் நிறத்தவன வாய்கள்அலறவிரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரஅதன்மேல்குரைத்தலை கழற்பணிய ஓமம்வில கும்புகைசெய் கோகரணமே.
சொற்பிரிப்பு
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள்அலற,விரல்தலை உகிர்ச் சிறிது வைத்த பெரு மான் இனிது மேவும் இடம் ஆம்புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலி வு ஆகி, வினை தீர, அதன்மேல்குரைத்து அலை கழல் பணிய, ஓமம் வில கும் புகை செய்கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வில்லிமையி னால்விறல ரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்இல்லையுள தென்றிகலி நேடஎரி யாகியுயர் கின்றபரனூர்எல்லையில் வரைத்தகடல் வட்டமும் இறைஞ்சிநிறை வாசமுருவக்கொல்லையில் இருங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே.
சொற்பிரிப்பு
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும்,வேதமுதலோன்,இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர்எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக்கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர், கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நேசமில் மனச்சமணர் தேரர்கள்நி ரந்தமொழி பொய்கள்அகல்வித்தாசைகொள் மனத்தையடி யாரவர் தமக்கருளும் அங்கணனிடம்பாசமத றுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னன்அவனைக்கூசவகை கண்டுபின் அவற்கருள்கள் நல்கவல கோகரணமே.
சொற்பிரிப்பு
நேசம் இல் மனச் சமணர், தேரர்கள், நி ரந்த மொழி பொய்கள் அகல்வித்துஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்பாசம் அது அறுத்து, அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை,கூச வகை கண்டு, பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கோடலர வீனும்விரி சாரல்முன் நெருங்கிவளர் கோகரணமேஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்பாடவல பத்தரவர் எத்திசையும் ஆள்வர்பர லோகமெளிதே.
சொற்பிரிப்பு
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமேஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்-நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய் ஞானசம்பந்தன்—மொழிகள்பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம்எளிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.