திருமுறை 3 · 3.078 · 11

திருவேதிகுடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
வேதிகுடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.
சொற்பிரிப்பு
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவைமற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.
சொற்பிரிப்பு
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவைமல் புரி புயத்து இனிது மேவுவர், எந் நாளும் வளர் வானவர் தொழத்துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர்வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திருவேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.
சொற்பிரிப்பு
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல்வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர்சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல்வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.
சொற்பிரிப்பு
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்-தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்-பாடல் உடையார்கள் அடியார்கள், மல ரோடு புனல் கொண்டு பணிவார்வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலாமிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.
சொற்பிரிப்பு
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத்தக்க அருள் பக்கம் உற வைத்த அர னார்; இனிது தங்கும் நகர்தான்-கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலா,மிக்கு அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே.
சொற்பிரிப்பு
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து“ஐயம் இடும்!” என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிகமின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே.
சொற்பிரிப்பு
உன்னி இருபோதும் அடி பேணும் அடி யார் தம் இடர் ஒல்க அருளித்துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இ ருந்த துணைவன் தன் இடம் ஆம்கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம்மிக,மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இ யற்று பதி வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவைவிரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.
சொற்பிரிப்பு
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம்முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவைவிரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.
சொற்பிரிப்பு
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய்“தேவும் இவர் அல்லர், இனி யாவர்?” என, நின்று திகழ்கின்றவர் இடம்பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அ றாத கொடையாளர்பயில்வுஆம்மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழிதஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.
சொற்பிரிப்பு
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் ம னத்து அறிவு இலாதவர் மொழிதஞ்சம் என என்றும் உணராத அடி யார் கருது சைவன் இடம்ஆம்அஞ்சுபுலன்வென்று அறுவகைப் பொருள் தெரிந்து எழுஇசைக் கிளவியால்வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ் கின்ற திருவேதிகுடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலேசிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே.
சொற்பிரிப்பு
கந்தம்மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்-பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலேசிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர்அந்த உலகு எய்தி அரசு ஆளுமது வே சரதம்; ஆணைநமதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.