திருமுறை 3 · 3.077 · 11

திருமாணிகுழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
மாணிகுழி
நாடு
நடுநாடு

1

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புனல் தங்குசடைமேல்வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடங்கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல்தங்கு சடைமேல்வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவேமாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விடந்தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமுரல் தண்பழனமிக்கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து, தெருவேமாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு இடம்தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம்மிக்குஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அம்பனைய கண்ணுமை மடந்தையவள் அஞ்சிவெரு வச்சினமுடைக்கம்பமத யானையுரி செய்தஅர னார்கருதி மேயவிடமாம்வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்உம்பரவர் கோன்நகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ, சினம் உடைக்கம்ப மதயானை உரிசெய்த அர னார் கருதி மேய இடம் ஆம்வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு ஆர்உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்டொத்தவரி வண்டுகளு லாவியிசை பாடுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
நித்தம் நியமத் தொழிலன் ஆகி, நெடு மால் குறளன் ஆகி, மிகவும்சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்கொத்து அலர் மலர்ப்பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டுஒத்த வரிவண்டுகள் உலாவி, இசை பாடு உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மாசில்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னியழகார்ஊசல்மிசை யேறியினி தாகஇசை பாடுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
மாசு இல் மதி சூடு சடை மா முடியர், வல் அசுரர் தொல்—நகரம் முன்நாசம் அது செய்து, நல வானவர்க ளுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்வாசம் மலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி,அழகு ஆர்ஊசல் மிசை ஏறி, இனிது ஆக, இசை பாடு உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாஞ்சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனம் ஆய்வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன் இடம் ஆம்சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு, கெடிலம்உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவிமாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்யஇறை யேகருணையாய்உண்பரிய நஞ்சதனை உண்டுலகம் உய்யஅருள் உத்தமனிடம்பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின்வாய்ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
எண் பெரிய வானவர்கள் நின்று துதி செய்ய, இறையே கருணைஆய்,உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு, உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்பண் பயிலும் வண்டுபல கெண்டி, மது உண்டு, நிறைபைம்பொழிலின் வாய்,ஒண் பலவின் இன்கனி சொரிந்து, மணம் நாறு உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்பண்ணமரும் மென்மொழியி னார்பணைமு லைப்பவள வாயழகதார்ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்ததிறல் ஆர்திண்ணிய அரக்கனை நெரித்து, அருள் புரிந்த சிவலோகன் இடம் ஆம்பண்அமரும் மென்மொழியினார், பணைமு லைப் பவளவாய் அழகுஅதுஆர்ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவிமாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நேடும்அய னோடுதிரு மாலும்உண ராவகை நிமிர்ந்துமுடிமேல்ஏடுலவு திங்கள்மத மத்தமித ழிச்சடையெம் ஈசனிடமாம்மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவின்ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேருதவி மாணிகுழியே
சொற்பிரிப்பு
நேடும் அயனோடு திருமாலும் உண ரா வகை நிமிர்ந்து, முடிமேல்ஏடு உலவு திங்கள், மதமத்தம், இத ழிச் சடை எம் ஈசன் இடம் ஆம்மாடு உலவு மல்லிகை, குருந்து, கொடி மாதவி, செருந்தி, குரவின்ஊடு உலவு புன்னை, விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி யில்லிகள் முயன்றனபடும்முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தஅதரில்ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.
சொற்பிரிப்பு
மொட்டை அமண் ஆதர், முது தேரர், மதி இ(ல்)லிகள் முயன்றன படும்முட்டைகள்மொழிந்த மொழிகொண்டுஅருள் செய் யாத முதல்வன் தன் இடம்ஆம்மட்டை மலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்தஅதரில்,ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர, ஏறு உதவிமாணிகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்அந்திமதி சூடியஎம் மானையடி சேருமணி காழிநகரான்சந்தம்நிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கள்நெடு வானநிலனே.
சொற்பிரிப்பு
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவிமாணிகுழிமேல்,அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்-சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்முந்தி இசை செய்து மொழிவார்கள் உடை யார்கள், நெடு வான நிலனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.