திருமுறை 3 · 3.076 · 11

திருமறைக்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு மானதிடம் என்பர்புவிமேல்மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியைவிற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரும் வேதவனமே.
சொற்பிரிப்பு
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்இல் பலி கொளப் புகுதும் எந்தை பெரு மானது இடம் என்பர் புவிமேல்மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எ னத் திரை கொழித்த மணியைவில் பொலி நுதல், கொடி இடை, கணிகை மார் கவரும் வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பண்டிரைப யப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே.
சொற்பிரிப்பு
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு, அரவினைக்கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன் இடம் ஆம்வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவுதென்றல்வெறிஆர்வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழிவேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே.
சொற்பிரிப்பு
கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார் சடையில் வைத்து, மலையார்நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம் மறுகில்தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம், நாளும் இசையால்,வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீறுதிரு மேனியின் மிசைத்தொளி பெறத்தடவி வந்திடபமேஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்தபதியாம்ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி தேருமட மாதருடனார்வேறுதிசை யாடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே.
சொற்பிரிப்பு
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி, வந்து, இடபமேஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன் ஆர்வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில் வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரசஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
சொற்பிரிப்பு
கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு, இடக்கை, படகம்,எத்தனை உலப்பு இல் கருவித்திரள் அ லம்ப, இமையோர்கள் பரச,ஒத்து அற மிதித்து, நடம் இட்ட ஒரு வர்க்கு இடம் அது என்பர் உலகில்மெய்த் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும்வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர்சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டுமது வுண்டிசைசெயவேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே.
சொற்பிரிப்பு
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல,காலையில் எழுந்த கதிர் தாரகை ம டங்க, அனல் ஆடும் அரன் ஊர்சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இன வண்டு, மது உண்டு இசைசெய;வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுற வம், கொணரும் வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலைவளைத்தஞ்சக மவித்தஅம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாங்கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயிலவிஞ்சக இயக்கர்முனி வக்கணம் நிறைந்துமிடை வேதவனமே.
சொற்பிரிப்பு
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார்சிலை வளைத்துஅஞ்சு அகம் அவித்த அமரர்க்கு அமரன், ஆதி பெருமானதுஇடம் ஆம்கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ் வாயவர்கள் பாடல் பயில,விஞ்சு அக இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முடித்தலைகள் பத்துடை முருட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்கெடுத்தலை நினைத்தற வியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமைவிடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.
சொற்பிரிப்பு
முடித் தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால்,அடித்தலம் முன் வைத்து, அலமர, கருணை வைத்தவன் இடம் பலதுயர்கெடுத்தலை நினைத்து, அறம் இயற்றுதல் கிளர்ந்து, புலவாணர் வறுமைவிடுத்தலை மதித்து, நிதி நல்குமவர் மல்கு பதிவேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியைக்கூசுதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே.
சொற்பிரிப்பு
வாசமலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத, நெறியைக்கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத, அரன் ஊர்காசு, மணி, வார் கனகம், நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்வீசு வலைவாணர் அவை வாரி, விலை பேசும் எழில் வேதவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

11

மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணிவெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவுசிவன் இன்னருளினாற்சந்தமிவை தண்டமிழின் இன்னிசை யெனப்பரவு பாடலுலகிற்பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே.
சொற்பிரிப்பு
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி,வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்அருளினால்,சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில்,பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில் வார்கள், உயர்வான் உலகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.