1
எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.
சொற்பிரிப்பு
“எம் தமது சிந்தை பிரியாத பெரு மான்!” என இறைஞ்சி, இமையோர்வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.