1
காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார்சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.
சொற்பிரிப்பு
காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.