1
பாடன்மறை சூடன்மதி பல்வளையொர் பாகமதில் மூன்றோர்கணையாற்கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.
சொற்பிரிப்பு
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர் பாகம் மதில் மூன்று ஒர் கணையால்கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினைவீடுமவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.