1
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
சொற்பிரிப்பு
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல்அரவம்,மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.