1
கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடும்வகையால்ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும் ஈசனிடமாம்தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறிவாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே.
சொற்பிரிப்பு
கோழை மிடறு ஆக, கவி கோளும் இலஆக, இசை கூடும்வகையால்,ஏழை அடியார் அவர்கள் யாவை சொனசொல் மகிழும் ஈசன் இடம் ஆம்தாழை இளநீர் முதிய காய் கமுகின்வீழ, நிரை தாறு சிதறி,வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல்சேறு செயும் வைகாவிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.