திருமுறை 3 · 3.070 · 11

திருமயிலாடுதுறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
மயிலாடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஏனவெயி றாடரவொ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய்க்கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணிஎனல் ஆம்ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர்வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்எந்தம்அடி கட்கினிய தானமது வேண்டில்எழி லார்பதியதாங்கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
அம்தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடுஅணிந்துஅழகர்ஆம்எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில், எழில் ஆர் பதி அதுஆம்கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூவாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி, மிகு நோக்குஅரியராய்,மூளைபடுவெண்தலையில் உண்டு, முது காடு உறையும் முதல்வர்இடமாம்பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட, நிரந்து, கமழ் பூ,வாளை குதிகொள்ள, மடல் விரிய, மணம் நாறும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஏதமிலர் அரியமறை மலையர்மக ளாகியஇ லங்குநுதலொண்பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாங்காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளான்மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்பேதை தடமார்பு அது இடம் ஆக உறை கின்ற பெருமானது இடம் ஆம்காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்,மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறும் நடந்துபலிதேர்பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாங்காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவரமாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம் தொறும் நடந்து, பலி தேர்பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல்ஆம்காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவமா விரி மதுக் கிழிய, மந்தி குதி கொள்ளும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாந்தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
கடம் திகழ் கருங்களிறு உரித்து, உமையும் அஞ்ச, மிகநோக்கு அரியராய்,விடம் திகழும் மூ இலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில்கொண்ட துவர்வாய்மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும்மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்எவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்கவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூமவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து, அவர்கள் மேல்எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூமவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ டிருபதுதோள் நெரியவிரலால்விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேற்கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம் மூழ்கிமலர் கொண்டுமகிழாமலங்கிவரு காவிரிநி ரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபதுதோள்நெரியவிரலால்விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா,மலங்கி வரு காவிரி நிரந்து பொழி கின்ற மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக நேடியுண ராதவகையால்அண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்டஅர னாரதிடமாங்கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி ருந்துகிளர் வாயறுதல்சேர்வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராதவகையால்,அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம் ஆம்கெண்டைஇரை கொண்டு கெளிறு ஆர் உடன் இருந்து, கிளர்வாய்அறுதல் சேர்வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளை யாடும் மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்கதிறலோன்இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூவண்டவை கிளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.
சொற்பிரிப்பு
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற, மிக்க திறலோன்இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெரு மானது இடம் என்பர் எழில் ஆர்தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை, நிரந்து கமழ்பூவண்டு அவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நிணந்தரும யானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க்கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப்புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே.
சொற்பிரிப்பு
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதி யாதது ஒரு சூலமொடு பேய்க்-கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு காதன்மையினால்,மணம் தண் மலி காழி மறை ஞானசம் பந்தன், மயிலாடுதுறையைப்புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய் வார், பெறுவர், பொன்னுலகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.