1
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.