திருமுறை 3 · 3.067 · 12

திருப்பிரமபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சீர்காழி - பல்பெயர்ப்பத்து
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப்புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.
சொற்பிரிப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்-புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்வரம் அருள வரல்முறையின் நிரல்நிறை கொள் வரு சுருதி சிர உரையினால்பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற்கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையேஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே.
சொற்பிரிப்பு
தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும் அளவில்,கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது நாணும் வகையேஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி—சேண் அமரர்கோன்வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு வேணுபுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண வகவுமுனிவர்க்ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர்புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே.
சொற்பிரிப்பு
பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரணஅகவு முனிவர்க்குஅகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள, நிகர் இல் இமையோர்புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு புகலி நகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித்துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம்வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.
சொற்பிரிப்பு
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித்துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.
சொற்பிரிப்பு
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர்தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவாதராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.
சொற்பிரிப்பு
“நிராமய! பராபர! புராதன! பராவு சிவ! ராக! அருள்!” என்று,இராவும் எதிராயது பராய் நினை புராணன், அமர் ஆதி பதியாம்அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா-தராயனை விராய் எரி பராய், மிகு தராய் மொழி விராய பதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே.
சொற்பிரிப்பு
அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம் மலி படைக்கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள் கரனது இடமாம்பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம் அரிய, அச்சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம் அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவி விரன்மாமறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.
சொற்பிரிப்பு
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி விரல், மா-மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும் இறைவன் இடம் ஆம்குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள, முறையொடு வரும்புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு புறவம் அதுவே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால்கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.
சொற்பிரிப்பு
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண் படைகொள் மால்,கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண் புசகர் புண் பயில விண் படர, அச்சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணராஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே.
சொற்பிரிப்பு
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணராஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு வாழ, அரனுக்குஆழிய சில் காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்மச்சமத நச்சிமத மச்சிறுமியைச் செய்த வவச்சவிரதக்கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.
சொற்பிரிப்பு
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால்மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடமாம்மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை கொச்சைநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையாமுழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே.
சொற்பிரிப்பு
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு வழியை நினையா,முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு,கெழுவு சிவனைத்தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி மொழிகள் மொழி தகையவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.