திருமுறை 3 · 3.066 · 11

திருவேட்டக்குடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
வேட்டக்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங்கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம்தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்குங்காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப் பயின்று எங்கும்காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல்போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர்தீ—எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியஆன் நிரையிற்பால்பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளிஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்ததீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்பாத்திரமா ஆட்டுதலும், பரஞ்சோதி பரிந்து அருளி“ஆத்தம்” என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த,தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடுந்திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும்திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்செங்கண்மால் கடையஎழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்திஅங்கம்நான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்ததிங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு அரவு உழலச்செங்கண் மால் கடைய, எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி;அங்கம் நால்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்ததிங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பிகோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்ததேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
நாவாய பிறைச் சென்னி, நலம் திகழும் இலங்கு இப்பி,கோவாத நித்திலங்கள், கொணர்ந்து எறியும் குளிர்கானல்ஏ ஆரும் வெஞ்சிலையால் எயில் மூன்றும் எரிசெய்ததேவாதி தேவனார் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகுகானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகுகான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள்திறலழிய அடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
துறை உலவு கடல் ஓதம் சுரிசங்கம் இடறிப் போய்,நறை உலவும் பொழில் புன்னை நன்நீழல் கீழ் அமரும்இறை பயிலும் இராவணன் தன் தலை பத்தும் இருபது தோள்திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும்இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும்,இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இகழ்ந்துரைக்குஞ் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்னநிகழ்ந்திலங்கு வெண்மணலின் நிறைத்துண்டப் பிறைக்கற்றைதிகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.
சொற்பிரிப்பு
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும், இடும் போர்வைச்சாக்கியரும்,புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின், பொருள் என்ன!நிகழ்ந்து இலங்கு வெண்மணலின் நிறைத் துண்டப் பிறைக்கற்றைதிகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திரு வேட்டக்குடியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்ஒண்டமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.
சொற்பிரிப்பு
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரைத்தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன்ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார்,போய்,உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து இருப்பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.