திருமுறை 3 · 3.065 · 11

திருக்கச்சிநெறிக்காரைக்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
கச்சி நெறிக்காரைக்காடு (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினிற்போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சிநீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே
சொற்பிரிப்பு
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காரூரும் மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண்டூரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டுஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி—அதளர்தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய்,நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோடாறணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளைஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
கூறு அணிந்தார், கொடியிடையை; குளிர்சடைமேல் இளமதியோடுஆறு அணிந்தார்; ஆடு அரவம் பூண்டு உகந்தார்; ஆள் வெள்ளைஏறு அணிந்தார், கொடி அதன்மேல்; என்பு அணிந்தார், வரைமார்பில்,நீறு அணிந்தார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள்மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி,சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும்நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்குன்றாத வெஞ்சிலையிற் கோளரவம் நாண்கொளுவிஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவியநின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்த அருளாளர்குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி,ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவியநின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்சநன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்வின்மலையின் நாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்தநின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச,நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து அழித்தநின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
புற்று இடை வாள் அரவினொடு, புனை கொன்றை, மத மத்தம்,எற்று ஒழியா அலைபுனலோடு, இளமதியம், ஏந்து சடைப்பெற்று உடையார்; ஒருபாகம் பெண் உடையார்; கண் அமரும்நெற்றியினார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த்தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார்ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும்நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமைபூண்டாரும் ஓரிருவர் அறியாமைப் பொங்கெரியாய்நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர்மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமைபூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய்நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்துமிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்லவண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகங்கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
சொற்பிரிப்பு
குண்டாடிச் சமண் படுவார், கூறை தனை மெய் போர்த்துமிண்டாடித் திரிதருவார், உரைப்பனகள் மெய் அல்ல;வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்கண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.
சொற்பிரிப்பு
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.