1
அண்ணாவுங் கழுக்குன்றும் ஆயமலையவை வாழ்வார்விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்தபெண்ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
சொற்பிரிப்பு
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்தபெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.