திருமுறை 3 · 3.063 · 11

திருச்செங்காட்டங்குடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
செங்காட்டங்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானேசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்யவெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே
சொற்பிரிப்பு
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊரச்சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானேசெங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும்அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள்கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேயஇன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே.
சொற்பிரிப்பு
பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன் வாழும்அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள்கல்—நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேயஇன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயவட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.
சொற்பிரிப்பு
குட்டத்தும், குழிக் கரையும், குளிர் பொய்கைத் தடத்துஅகத்தும்,இட்டத்தால் இரை தேரும், இருஞ் சிறகின் மட நாராய்!சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேயவட்ட வார்சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயவானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.
சொற்பிரிப்பு
கான் அருகும், வயல் அருகும், கழி அருகும், கடல் அருகும்,மீன் இரிய, வருபுனலில் இரை தேர் வண் மடநாராய்!தேன் அமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேயவான் அமரும் சடையார்க்கு என் வருத்தம், சென்று,உரையாயே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயநீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.
சொற்பிரிப்பு
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகுஉலர்த்தும்,பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்!சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேயநீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேயசிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.
சொற்பிரிப்பு
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே? குளிர்பொய்கைத்துறைக் கெண்டை கவர் குருகே! துணை பிரியா மடநாராய்!கறைக்கண்டன், பிறைச்சென்னி, கணபதீச்சுரம் மேயசிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரேசெருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயதிருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.
சொற்பிரிப்பு
கரு அடிய பசுங் கால் வெண் குருகே! ஒண் கழி நாராய்!“ஒரு அடியாள் இரந்தாள்” என்று, ஒரு நாள் சென்று, உரையீரே!செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேயதிருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந்தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரேசீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயபேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.
சொற்பிரிப்பு
கூர் ஆரல் இரை தேர்ந்து, குளம் உலவி, வயல் வாழும்தாராவே! மடநாராய்! தமியேற்கு ஒன்று உரையீரே!சீராளன், சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேயபேராளன், பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம்அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதேசிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயபிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.
சொற்பிரிப்பு
நறப் பொலி பூங் கழிக் கானல் நவில் குருகே! உலகு எல்லாம்அறப் பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே?சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேயபிறப்பு இலி பேர் பிதற்றி நின்று, இழக்கோ, என் பெரு நலமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

11

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேயவெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்டஅந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ்சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.
சொற்பிரிப்பு
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய,வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட,அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும்சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.