திருமுறை 3 · 3.062 · 11

திருப்பனந்தாள்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
பனந்தாள்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்சஎரித்தவன் முப்புரங்கள் இய லேழுல கில்லுயிரும்பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்தரித்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்சஎரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம் தன்னைத்தரித்தவன்; ஊர் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்மடுத்தவன் நஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
உடுத்தவன், மான் உரி—தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர் நால்மறையான்;மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்தடுத்தவன்; ஊர் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்போழிள வெண்மதியும் அனல் பொங்கர வும்புனைந்ததாழ்சடை யான்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்—பாய்புனலும்,போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்ததாழ்சடையான் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விடம்படு கண்டத்தினான் இருள் வெள்வளை மங்கையொடும்நடம்புரி கொள்கையினான் அவன் எம்மிறை சேருமிடம்படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்தடம்புனல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம்படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும்தடம் புனல் சூழ் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விடையுயர் வெல்கொடியான் அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்தசடையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும்எல்லாம்புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும்,அணிந்தசடையவன்; ஊர் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மலையவன் முன்பயந்த மட மாதையோர் கூறுடையான்சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்அலைமலி தண்புனலும் மதி ஆடரவும் மணிந்ததலையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர் கூறு உடையான்;சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்;அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்ததலையவன்; ஊர் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லால் அடர்த்துமுற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்தற்றவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
செற்று, அரக்கன் வலியை, திரு மெல்விரலால் அடர்த்துமுற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன்; மும்மையினான்;புற்று அரவம், புலியின்(ன்) உரி— தோலொடு, கோவணமும்,தற்றவன்; ஊர் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வின்மலை நாணரவம் மிகு வெங்கனல் அம்பதனால்புன்மைசெய் தானவர்தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்நன்மலர் மேலயனும் நண்ணும் நாரணனும் மறியாத்தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்தன்மையன்; ஊர் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்நீதர் உரைக்குமொழி யவை கொள்ளன்மின் நின்மலனூர்போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்தாதவி ழும்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
சொற்பிரிப்பு
ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்போது அவிழ் பொய்கைதனுள்—திகழ் புள் இரிய, பொழில்வாய்த்தாது அவிழும் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தண்வயல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரத்துக்கண்ணய லேபிறையான் அவன் றன்னைமுன் காழியர்கோன்நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம் பந்தன்நல்லபண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே.
சொற்பிரிப்பு
தண்வயல் சூழ் பனந்தாள்—திருத் தாடகையீச்சுரத்துக்கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்லபண் இயல் பாடல் வல்லார் அவர் தம் வினை பற்றுஅறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.