திருமுறை 3 · 3.061 · 11

திருவெண்டுறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
வெண்டுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன்பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன்போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்தவேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே
சொற்பிரிப்பு
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்தவேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான்வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான்;பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்;மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்;வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான்கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்உடைநவி லும்புலித்தோல் உடையாடையி னான்கடியவிடைநவிலுங் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை உடையான்,கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான்,உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடியவிடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம்எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான்,பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான்,விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம்வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்சீரிய லும்மலையாள் ஒருபாகமுஞ் சேரவைத்தான்போரிய லும்புரமூன் றுடன்பொன்மலை யேசிலையாவீரிய நின்றுசெய்தான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்;சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான்போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான்யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின்வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு அரியான்;போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்;யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின்வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கன்றிய காலனையும் முருளக்கனல் வாயலறிப்பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்சென்றிமை யோர்பரவுந் திகழ்சேவடி யான்புலன்கள்வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப்பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான்,சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள்வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம்வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்தசிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான்பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண்விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
கரம் இரு—பத்தினாலும் கடுவெஞ்சினம் ஆய் எடுத்தசிரம் ஒருபத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான்,பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒருபாகமும் பெண்விரவிய வேடத்தினான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கோலம லரயனுங் குளிர்கொண்டல் நிறத்தவனுஞ்சீலம றிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செந்தழலான்மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்வேலைவி டமிடற்றான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்,சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்;மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்;வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நக்குரு வாயவருந் துவராடைந யந்துடையாம்பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன்திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம்மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.
சொற்பிரிப்பு
நக்க உரு ஆயவரும், துவர் ஆடை நயந்து உடை ஆம்பொக்கர்கள், தம் உரைகள்(ள்) அவை பொய் என, எம் இறைவன்,திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான், கனகம்மிக்கு உயர் சோதி அவன், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன்எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்னபண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.
சொற்பிரிப்பு
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை,தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்-எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்—சொன்னபண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.