திருமுறை 3 · 3.060 · 11

திருவக்கரை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
வக்கரை
நாடு
தொண்டைநாடு

1

கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
சொற்பிரிப்பு
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண்அமர்ந்தான்,மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்—வக்கரையில்உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியொர் பாகமதாஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்சவாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.
சொற்பிரிப்பு
பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதாஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்சவாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்—வக்கரையில்தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி செப்புதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்சஅந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்மந்தர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே.
சொற்பிரிப்பு
“சந்திரசேகரனே, அருளாய்!” என்று, தண் விசும்பில்இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால்,மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நெய்யணி சூலமோடு நிறைவெண்மழு வும்மரவுங்கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே.
சொற்பிரிப்பு
நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும்கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்;மெய் அணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின், மேல்;மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம் வக்கரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்துகூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்லமானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
சொற்பிரிப்பு
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்துகூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்லமான் அன மென் விழியா ளொடும் வக்கரை மேவியவன்,தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்லவார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.
சொற்பிரிப்பு
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்லவார் மலி மென் முலையா ளொடும் வக்கரை மேவியவன்,பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கானண வும்மறிமான் ஒருகையதோர் கைமழுவாள்தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.
சொற்பிரிப்பு
கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள்தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்-வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்;ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்கலங்கவொர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலறநலங்கெழு சிந்தையனாய் அருள்பெற்றலு நன்களித்தவலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
சொற்பிரிப்பு
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக்கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற,நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்தவலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்தவாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.
சொற்பிரிப்பு
காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப,“சேமமே, உன் தனக்கு!” என்று அருள் செய்தவன்; தேவர்பிரான்;சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்தவாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான்பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே.
சொற்பிரிப்பு
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள்தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்;பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும்வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம் வக்கரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்னபண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே.
சொற்பிரிப்பு
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,சண்பையர் தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன்—சொன்னபண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.