1
அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலேமரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமாஇரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
அர விரி கோடல் நீடல்அணி காவிரியாற்று அயலே,மர விரி போது, மௌவல்,மணமல்லிகை, கள் அவிழும்குர, விரி சோலை சூழ்ந்த,குழகன், குடமூக்கு இடமா,இர விரி திங்கள் சூடிஇருந்தான்; அவன் எம் இறையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.