திருமுறை 3 · 3.057 · 11

திருவொற்றியூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
ஒற்றியூர்
நாடு
தொண்டைநாடு

1

விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட்படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச்சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோடுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள்படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடுஉடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய்சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத்தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனாஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகிஅளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்திகளிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்தஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி;அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்தஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரவமே கச்சதாக அசைத்தானலர்க் கொன்றையந்தார்விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தைபரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல்உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்லபலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலேஅலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டாதுலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்லபலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே,அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு, முட்டாதுஉலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச்சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும்அமையொடு நீண்டதிண்டோள் அழகாயபொற் றோடிலங்கஉமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப,சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும் சோமனையும்;அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்—தோடு இலங்க,உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலேகன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையாப்பொன்றினார் வார்சுடலைப் பொடிநீறணிந் தாரழல்அம்பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே,கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,பொன்றினார் வார் சுடலைப் பொடி—நீறு அணிந்தார் அழல்அம்புஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல்சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ்ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான் உரி—தோல்சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க,தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு மால்வரைக்கீழ்ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திருவினார் போதினானுந் திருமாலுமொர் தெய்வமுன்னித்தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்துபரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோடொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி,தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடுஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார்ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக்கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே.
சொற்பிரிப்பு
தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள் போர்த்து உழல்வார்ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன் மின்! ஏழ்உலகும்ஓகை தந்து ஆள வல்லான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரைச்சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்னபண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார்விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே.
சொற்பிரிப்பு
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,சண்பையர் தம் தலைவன்— தமிழ் ஞானசம்பந்தன்—சொன்னபண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.