1
இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்றகறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்றுமறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னுசென்னிப்பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே.
சொற்பிரிப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்றகறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்றுமறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.