திருமுறை 3 · 3.055 · 11

திருவான்மியூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
வான்மியூர்
நாடு
தொண்டைநாடு

1

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனேஉரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய்திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்!கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனேமையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனேசெய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்—திருமேனியனே!மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்ஐயா!—உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனேமின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனேதென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே!மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்எண் ஆர் வெண்பொடி—நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ்திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ்சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்;ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங்கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய்தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும்கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனேசெறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
பொறி வாய் நாக(அ)ணையா னொடு, பூமிசை மேயவனும்,நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே!செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.
சொற்பிரிப்பு
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள்கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்!திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரைசென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேற்குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.
சொற்பிரிப்பு
"கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே. "
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.