திருமுறை 3 · 3.054 · 12

திருப்பாசுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
பொது
நாடு
பொது

1

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குகஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமேசூழ்க வையக முந்துயர் தீர்கவே.
சொற்பிரிப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமேசூழ்க! வையகமும் துயர் தீர்கவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
சொற்பிரிப்பு
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வெந்த சாம்பல் விரையெனப் பூசியேதந்தை யாரொடு தாயிலர் தம்மையேசிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.
சொற்பிரிப்பு
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,தந்தையாரொடு தாய் இலர்; தம்மையேசிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டாகோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தைதாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
சொற்பிரிப்பு
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தைதாள்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்க, தக்கார்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதிமாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.
சொற்பிரிப்பு
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
சொற்பிரிப்பு
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்லபடிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டுமுடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்திஅடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.
சொற்பிரிப்பு
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்லபடி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டுமுடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்திஅடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்தசூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
சொற்பிரிப்பு
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்தசூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணிநீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.
சொற்பிரிப்பு
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடிபேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்தஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.
சொற்பிரிப்பு
மால் ஆயவனும் மறைவல்லவ நான்முகனும்பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்தஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.
சொற்பிரிப்பு
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்லஎல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
சொற்பிரிப்பு
நல்லார்கள் சேர் புகலி ஞானசம் பந்தன், நல்லஎல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.