1
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே.
சொற்பிரிப்பு
வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.