திருமுறை 3 · 3.052 · 11

திருஆலவாய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனேகாடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
சொற்பிரிப்பு
வீடுஅலால் அவாய்இலாஅய், விழுமியார்கள் நின்கழல்பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமாஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்தியாக்கொட்டிசைந்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாய்எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.
சொற்பிரிப்பு
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமாஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய்சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீகற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவைமுற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.
சொற்பிரிப்பு
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவைமுற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீமதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.
சொற்பிரிப்பு
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல்அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்!சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கோலமாய நீள்மதிற் கூடல்ஆல வாயிலாய்பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும் உன்னையேநீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலுஞ்சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.
சொற்பிரிப்பு
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடைபின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீகொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.
சொற்பிரிப்பு
பொன் தயங்கு—இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடைபின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆதியந்த மாயினாய் ஆலவாயில் அண்ணலேசோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய்கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே.
சொற்பிரிப்பு
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடற்துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
சொற்பிரிப்பு
"கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங்கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும்நின்தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.
சொற்பிரிப்பு
"தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்!தீ வணம் மலர்மிசைத் திசை முகனும், மாலும், நின்தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும்போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார்கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.
சொற்பிரிப்பு
"தேற்றம் இல் வினைத்தொழில்— தேரரும் சமணரும்போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளாகூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்!நால்—திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே?"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்ஆயசொல்லின் மாலைகொண் டாலவாயில் அண்ணலைத்தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.
சொற்பிரிப்பு
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-பாய கேள்வி ஞானசம் பந்தன்—நல்ல பண்பினால்,ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.